தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் காலடிப்பேட்டை வீட்டு மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் :

0
219
  1. காலடிப்பேட்டை விநியோக பிரிவு மின் நுகர்வோர்களுக்கு   மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வீட்டு மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் இம்மாதம் ஜனவரி 31ஆம் தேதியுடன் காலடிப்பேட்டை விநியோகம் பிரிவு அலுவலகத்தில் நிறைவடைகிறது..இதன் தொடர்ச்சியாக 22. 1.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மாநகராட்சி12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் திருவெற்றியூர்-ஓடியன் மணி தியேட்டர் எதிரில். மின்னினைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது .இந்த சிறப்பு முகாமில் சின்ன மேட்டுப்பாளையம், கைலாஷ் செக்டர், பெரிய மேட்டுப்பாளையம், வீரராகவன் தெரு, வன்னியர் தெரு,டி பி எஸ் நகர், செட்டி தெரு, வடக்கு மாடவீதி ,கைலாஷ் செக்டர், காலடிப்பேட்டை மேற்கு மாட வீதி, காலடிப்பேட்டை வடக்கு மாடவீதி,பி கே என் நாயுடு காலனி,திலகர் நகர், எடுத்துகாரன் தெரு, சாத்தங்காடு ஹை ரோடு, கவரத்தெரு, ஜாண்டவர் தெரு, புது தெரு ,வசந்தா நகர் , அய்யா பிள்ளை தோட்டம், மேட்டு தெரு ,சாத்தாங்காடு கிராம தெரு, யுனைடெட் காலனி, கன்னியப்ப கிராமணி நகர், பெருமாள் கோவில் தெரு, காந்தி நகர், ஒத்தவாடை, காலடிப்பேட்டை சன்னதி தெரு, உதயசூரியன் தெரு மற்றும் ஜானகி அம்மாள் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் வீட்டு மின் நுகர்வோர்கள் ஆதார் எண்களை இணைத்து முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது

இப்படிக்கு
உதவி பொறியாளர்: விநியோகம் காலடிப்பேட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here