சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் உத்தரவின் பெயரில் வண்ணாரப்பேட்டை துணைஆணையர் ஜி.சுப்புலஷ்மி மற்றும் திருவொற்றியூர் ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் ஊரடங்கின் போது பொதுமக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் விதமாக,ட்ரோன்கோமரா மூலமாக காலடிப்பேட்டை மார்க்கெட்,வன்னியர் தெரு,ஜான்ரேவர்தெரு,திருவொற்றியூர்நெடுஞ்சாலை,எண்ணூர் விரைவுச்சாலை,புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுத்தார்கள்.இதனால் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றுவது தவிர்க்கப்படும்.















