பால் கடையில் பணம் திருட்டு, சிசிடிவியில் சிக்கிய நபர். விரட்டி சென்று பிடித்த போலீஸ்;

0
388

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் நகர் , பர்மா காலனியை சேர்ந்தவர வீராசாமி(43), இவர், ஜான் ஸ்டோர் என்ற பெயரில், பால் கடை நடத்தி வருகிறார், இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில், பால் வியாபாரம் செய்த சுமார் 1 லட்சம் ரூபாய் பணத்தை, கடையின் கல்லா பெட்டியில் வைத்துள்ளார். மறு நாள் காலையில், பால் வியாபாரம் செய்து விட்டு, பின்னர் கடையை பூட்டி விட்டு சென்றார், அப்போது, கடையின் பூட்டை உடைத்து, மர்ம நபர் ஒருவர் , கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றார், இது தொடர்பாக, புது வண்ணாரப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டன, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அப்போது, வீராசாமி கடையை உடைத்து கொள்ளையடிக்கும் மர்ம நபர் ஒருவரின் காட்சி இருந்தன, அந்த காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்டன, இந்த நிலையில், கொருக்குப்பேட்டை , மன்னப்பன் தெருவில் , நேற்று, அந்த சிசிடிவி காட்சியில் வெளியான மர்ம நபர் சுற்றி திரிந்தார், இதை பார்த்த , கொருக்குப்பேட்டை தலைமை காவலர் ரமேஷ் மற்றும் போலீசார் , பின் தொடர்ந்து சென்று, அந்த நபரை பிடித்தனர், விசாரணையில், அவர் , கொருக்குப்பேட்டை, நேரு நகர் பகுதியை சேர்ந்த பழனி(51) என தெரியவந்தது, பின்னர், அவரை, புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், போலீசார் ,பழனியை கைது செய்து, ரூ,15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here