பேஸ்புக்கில் (FACE BOOK) பல பெண்களிடம் கைவரிசை;

0
283

சென்னை கீழ்பாக்கத்தில் பேஸ்புக் மூலம் நட்புடன் பழகி பெண்ணிடம் கடனாக தருமாறு ரூ.2.75 லட்சம் வரை வாங்கி இளைஞர் மோசடி செய்துள்ளார். இதேபோல் பல பெண்களிடம் அவர் மோசடி செய்திருப்பது விசாரணையில் வந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையை சேர்ந்தவர் பிரவீன் கடலோயா (49) என்பவர் வேப்பேரி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அவர் தனது புகார் மனுவில் “மனைவி ராக்கி கடலோயாவிடம் சூளை ஹன்டர்ஸ் சாலையை சேர்ந்த திலீப் (28) என்ற இளைஞர் அறிமுகம் ஆனார். பின்னாளில் நண்பர்களாக பழகி எனது குடும்பத்தினரிடம் அறிமுகமாகி நன்றாக பழகினார். புதிதாக வியாபாரம் செய்ய பணம் தேவை என்று என் மனைவியிடம் கேட்டுள்ளார் கடனாக ரூ.2.75 லட்சம் கேட்டுள்ளார். என் மனைவியும் கடந்த ஜனவரி 20ம் தேதி திலீப்புக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் அதன் பிறகு போனை எடுக்காமல் புறக்கணிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் திலீப் போனை எடுக்காமல் துண்டித்தார். எனவே அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து வேப்பேரி. போலீசார் நேற்று முன்தினம் இரவு திலீப்பை கைது செய்தார்கள். விசாரணையில் திலீப் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here