வேலூர் மாவட்ட காவல்துறை, குடியாத்தம், சாலை பாதுகாப்பு வார விழா இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை துவக்கி வைத்தார் வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன். அப்பொழுது அங்கு ஹெல்மெட் இல்லாமல் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கி. மேலும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உடன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மற்றும் குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் சௌந்தர் ராஜன் இந்த பேரணி துவக்கத்திற்கு முன்பு ஒரு இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தபடி மேலும் அவர்கள் செல்போனில் பேசிக்கொண்டு வந்துள்ளதை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் கவனித்து அவர்களை நிறுத்தி. போக்குவரத்து அதிகாரிகளிடம் இவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். வேலூர் மாவட்ட காவல்துறை மாவட்ட முழுவதும் வாகன சோதனைகள் நடத்திவருகிறது. அதில் போக்குவரத்து விதிகளை மிருபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் நிருபர் சுவேதா S. கார்த்திகேயன்














