வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மாடு விடும் திருவிழா நடத்தினால் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- மாடுவிடும் திருவிழாவிற்கு மாவட்ட காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

0
244

வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் திருவிழாவிற்க்கு பல்வேறு கிராமங்களில் இருந்து மனு அளித்துள்ளனர் அந்த மனுக்கள் பரிசிலக்கப்பட்டு எந்தெந்த தேதியில் மாடு விடுவது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழா கமிட்டியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளை முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை மாடுவிடும் திருவிழா காண தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்.                       அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கடைப்பிடிக்கப்படுபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் முறையான அனுமதி பெற்ற பிறகே மாடு விடும் திருவிழா நடத்த வேண்டும் என்றும்  அனுமதி இன்றி யாராவது மாடு விடும் திருவிழா நடத்தினால் விழா கமிட்டியினர் மீதும் மாட்டின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.

குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here