சென்னை வடக்கு மாவட்டம் ஆர் கே நகர் கிழக்கு பகுதி 42வது வட்டம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார் பகுதி செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்துகொண்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி அவர் பேசியதாவது தலைவர் கலைஞருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது அவர் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்துள்ளார் இந்தியாவிலேயே உள்ள அரசியல் தலைவர்களில் சிறந்து விளங்கியவர் நமது தலைவர் ஆனால் அவர் இறந்தபோது மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தராமல் எடப்பாடி அரசு மறுத்தது ஆனால் சட்டப்படி இடத்தைப் பெற்றோம் அவருடைய உடலை அடக்கம் செய்தோம் இதுதான் அவருக்கு நாம் செய்த மரியாதை அந்த வழியில் தற்போது முக ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் உதாரணத்திற்கு தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது திமுக அரசு மக்களுக்கு செய்த திட்டங்கள் தான் தேர்தலில் வாக்குகளாக மாறி வெற்றி பெற செய்ய வைத்தது முதன் முதலில் கள்ளச்சாராயம் காசிய மாநிலம் என்றால் அது குஜராத் தான் அதேபோல் போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்த மாநிலமும் அதுதான் இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் பாஜகவினர் பேசிய வருகிறார்கள் சிறுவர் முதல் முதியவர் வரை திட்டங்களை செய்து வரும் ஒரே அரசு நம்முடைய அரசு என்பதில் பெருமை கொள்கிறோம் இந்த நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். டி. சேகர், எம் எல் ஏ. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், வழக்கறிஞர் மருது கணேஷ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் இளவரசன், ரூபசங்கர், ப.ஆ. சண்முகம், தேவதாஸ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Home Uncategorized சென்னை வடக்கு மாவட்டம் ஆர் கே நகர் கிழக்கு பகுதி 42வது வட்டம் சார்பில் முத்தமிழ்...
















