குடியாத்தம் சீவூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

0
359

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் ஊராட்சி 9 வது வார்டில் சீவூர் ஊராட்சியில், ஊராட்சி ஊழியர்கள், மற்றும்‌ மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வார்டு உறுப்பினர் ஜெயந்தி செல்வம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித் குமார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமிநாதன் ஹெல்பிங் ஆர்ட்ஸ் அறக்கட்டளை பார்த்தி (எ)ராஜேஷ் சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் ,துணைத் தலைவர், நண்பர்கள் சேவை குழு நிர்வாகிகள் குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் எம்ஜிஆர் நகர் பெரியோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை M.செல்வம்,விஜயகுமார், B J P ஞானம் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் சமத்துவ பொங்கலை  தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடர்ந்து பாரம்பரிய சிலம்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் ஊர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here