சென்னை காசிமேட்டில் கடலில் காணாமல் போன சிறுவன் உடல் கரை ஒதுங்கியது;

0
306

சென்னை காசிமேட்டில் நேற்று மதியம் நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமான நிலையில் தற்போது சிறுவனின் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது

ராயபுரம் பிச்சாண்டி தெரு பகுதியை சேர்ந்த 6 சிறுவர்கள் நேற்று மதியம் காசிமேடு கடற்கரை பகுதியில் குளிப்பதற்காக வந்துள்ளனர் இந்நிலையில் ராட்சத அலையில் சிக்கி கிரண் மற்றும் முகமது என்ற இரண்டு சிறுவர்கள் மற்றும் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர் இதில் அருகில் இருந்த மீனவர்கள் கிரணை உடனடியாக மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் தீயணைப்பு துறையினர் போலீசார் கடலோர காவல்படை என காணாமல் போன 16 வயது சிறுவன் முகமதை தேடி வந்த நிலையில் 24 மணி நேரம் கழித்து அதே இடத்தில் சிறுவனின் உடல் சடலமாக கரை ஒதுங்கி உள்ளது

கடந்த சில நாட்களாகவே கடலில் குளிக்கும் சிறுவர்கள் கடலில் அடித்துச் செல்லப்படுவது வழக்கமாகி உள்ள நிலையில் காவல்துறை கடலில் குளிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்திருந்தபோதிலும் பெற்றோர்கள் சிறுவர்களை கடல்பகுதி அனுப்பாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here