தேர்தலில் போட்டியிட ஏராளமான இளைஞர்கள் வாய்ப்பு கேட்பார்கள் என்றும் தகுதியான நபர்களை தலைமை தேர்வு செய்யும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே இ-பாஸ் முறை நீட்டிக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவில் இணைந்துள்ள அண்ணாமலை பற்றி தனக்கு தெரியாது எனவும் அவர் முக்கிய நபரா என்றும் உதயநிதி வினவினார். இப்போது நீட், ஜேஇஇ தேர்வை நடத்துவது பணக்கார வீட்டு மாணவர்களுக்குத்தான் சாதகம்-தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 1.25 லட்சம் இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்த நிலையில் அவர்களுக்கான அடையாள அட்டையை விநியோகிக்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளதா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளதாகவும் திமுகவினர் மக்களை சந்திக்கக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ் முறையை நீட்டித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். இன்னும் ஒரு மூன்று நாட்களில் இ-பாஸ் முறைக்கு முடிவுகட்டப்படும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த அண்ணாமலையை பற்றி தனக்கு தெரியாது என்றும் அவர் என்ன முக்கிய நிர்வாகியா எனவும் செய்தியாளர்களிடம் வினவினார். திமுககாரர்கள் யாரும் பாஜகவுக்கு செல்லவில்லை என்றும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள் தான் இப்போது பாஜகவுக்கு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். மதத்தை வைத்து நீட் தேர்வு எப்போதும் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் உதயநிதி கூறியுள்ளார். மேலும், மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை திமுகவுக்கு இல்லை என்றும் யார் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்தி திணிப்பையும், ஆதிக்கத்தையும் தான் திமுக எதிர்க்கிறதே தவிர இந்தி மொழிக்கு எதிரான கட்சியல்ல என விளக்கம் அளித்தார். சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட நிறைய இளைஞர்கள் வாய்ப்பு கேட்கக்கூடும் என்றும் தகுதியான நபர்களுக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி தலைமை முடிவெடுக்கும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.














