09.06.2021.
அகில இந்திய மீனவர்ச ங்கத்தின் சார்பில்
தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்தி தொடர்பாளருமான.
டாக்டர் நாஞ்சில் P.ரவி
இன்று 09.06.2021 *சென்னை காசிமேடு மீன்பிடி* துறைமுகத்தை ஆய்வு செய்ய வந்த
மாண்புமிகு. அனிதா R.ராதாகிருஷ்ணன்*
மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களிடம்
21 அம்ச கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
1.காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மீன்வள பூங்காவாக அறிவிக்க வேண்டும்.*
2.மீனவர்கள் பயன்படுத்தும் டீசல் விலை தற்போது லிட்டர் 1 க்கு ரூபாய் 100 க்கு விற்கும் நிலைக்கு வந்துவிட்டதால், மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாமல் உள்ளதால், தற்போது மாநில அரசு பெரிய விசைப் படகுகளுக்கு ஆண்டுக்கு 18000 லிட்டரிலிருந்து 40000 லிட்டராகவும்* சிறிய நாட்டுபடகு பைபர் படகுகளுக்கு ஆண்டுக்கு 4000 லிட்டரிலிருந்து *10000 லிட்டராகவும் உயர்த்தி மானிய விலையில்* வழங்க வேண்டும்.அல்லது மீனவர்கள் பயன்படுத்தும் அனைத்து டீசல் மற்றும் மண்ணென்னைக்கு அனைத்து வரிகளையும் விலக்கி *உற்பத்தி விலைக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
3. மீனவர்கள் கடலில் காணாமல் போனால் மீனவர்களை தேடிகண்டு பிடிக்க *கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் முத்து, நீலம், பவளம்,* போன்ற அதி நவீன வசதிகளுடன் கூடிய கருவிகளுடன் உயிர் காக்கும் வசதிகளுடன் கூடிய படகுகள் இருந்தது.தற்போது அது போன்று இல்லை எனவே *உயிர்காக்க புதிய படகுகள் தமிழகத்தில் 10 இடங்களில் நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
4 மீனவர்கள் கடலில் காணாமல் போனால் கண்டுபிடிக்க *தமிழகத்திற்கு 2 ஹெலிகாப்டரும் சென்னையில் ஒன்றும் தூத்துக்குடியில் ஒன்றுமாக நிறுத்தவும் அவசர காலத்தில் மீனவர்களையும் உடன் அழைத்து செல்லவும் முன் அனுமதி வழங்கி தமிழக அரசு* நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்த மானியமாக தமிழ்நாட்டில் உள்ள 14 கடலோர மாவட்டத்தில் உள்ள *மீனவர்கள் புதிய படகுகள் கட்டும் போது 90 % விகிதம் மானியத்தில் படகு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
6. ஆழ்கடல் மற்றும் அனைத்து நாட்டு படகு இரண்டு இன்ஜின் பைப்பர் படகுகள் பயன்படுத்ததும் *டீசல் மற்றும் மண்ணணெய்க்கு மாநில அரசின் அனைத்து வரிகளையும் பசுமைவரி, சாலைவரி, கலால்வரி அனைத்தையும் ரத்து செய்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும்.
7. தமிழக அரசின் *மீன் வலைகள் பின்னும் கூடம் இராயபுரத்தில் மூடப்பட்டதால்* தனியார் வலை தயாரிப்பு நிறுவனங்கள் *இஷ்டத்துக்கு விலை உயர்த்தி விற்கின்றார்கள். அதை தடுக்க மாநில அரசு வலை தயாரிக்கும் கம்பெனி உருவாக்கப்பட்டு மானிய விலையில் வலை மற்றும் லைப் ஜாக்கட், G.P.S.,எக்கோ சவுண்டர் ,V.H.F, RT ஆகிய தகவல் தொழில் நுட்பங்கள் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
8.சென்னை காசிமேடு மீன்பிடித்துறை முகத்தில் *தரமான சாலை, மின்சார வசதி, தரமான குடிநீர் , கழிவுநீர் வசதி, ஐ மாஸ் விளக்குகள் , C.C.T.V கேமரா ஆகியவை தமிழக அரசு செய்து தரவேண்டும்.
9.தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் *மீனவ பெண்களுக்கு மீன் விற்பனை செய்ய புதிய மீன் அங்காடிகள் தேவை.* ஏற்கனவே உள்ள *மீன் அங்காடிகளை புதுப்பிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
10.மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் தொடங்க *குளிர்பதன கிடங்குகள், பிரிசிங் பிளாண்ட் கட்ட பல* இடங்களில் அனுமதி வாங்குவதை தவிர்த்து *ஒரே இடத்தில் அனைத்து அனுமதியும் வழங்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
11. மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலில் காணாமல் போனால் அல்லது இறந்துவிட்டார் என்றால் *அரசு வேலை மற்றும் இழப்பீடாக ரூபாய் 25 லட்சம் மாநில அரசு வழங்க வேண்டும்.*
12.படகுகள் முழு சேதம் அடைந்தால் *புதிய படகுகள் கட்ட மாநில அரசு 80% விகிதமும் மானியமும் 20% சதவிகிதம் வங்கி கடனும் பிணை இன்றி வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
13. மீன்கள் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் *செக் போஸ்டில் தனி வழியும் டோல் கேட்டில் கட்டணம் இல்லாமலும் அதி விரைவாக செல்ல மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
14.இலங்கை கடற்படை மற்றும் *அண்டை நாடுகளின் சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், படகுகளையும் மீட்க தமிழக அரசு* உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15. மத்திய அரசு வழங்கிய கடன் அட்டை மூலம் *வங்கிகள் கடன் வழங்க மறுக்கும் வங்கிகள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை* எடுக்க வேண்டும்.
16.மீன்வளத்துறை, கப்பற்படை , கடலோர காவல்படை போன்ற *கடல் சம்மந்தமான* துறைகளில் மீனவ ஆண், பெண் இளைஞர்களுக்கு 80% விகிதம் வேலை வாய்ப்பு* வழங்க வேண்டும்.
17. தமிழகத்தில் *புதிய மீன்பிடி துறைமுகங்கள்* கட்ட மாநில அரசின் நிதி உதவியும் சுற்றுசூழல் அனுமதியும்வி ரைவாக வழங்கவும். குறிப்பாக கன்னியாகுமாரி மாவடத்தில் உள்ள இராஜாக்கமங்கலம்துறை மீன்பிடி துறைமுகம் கட்ட மத்திய அரசின் அனைத்து அனுமதிகளையும் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18. மீன்பிடித் தொழில் செய்யும் அனைத்து ஆண், பெண் தொழிலாளர்களுக்கு59 வயதுக்கு பிறகு மாநில அரசு முதியோர் ஓய்வுதியமாக ரூபாய் 5000 வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
19. உலக தரம் வாய்ந்த கேரை மீன்களை மீனவர்கள் பல லட்சம் டன் மீன்கள் பிடித்து வந்தாலும் அதன் விலை மிக மிக குறைவாக உள்ளது. இந்த வகையான கேரை மீன்களை தமிழக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மீன்வளத்துறை சார்பில் *கேரை மீன் உணவு விழிப்புணர்வு* நிகழ்வுகள் நடத்தி அனைத்து மக்களையும் விரும்பி உண்ண கலை நிகழ்ச்சிகள். *மீன் உணவு திருவிழா நடத்தி அரசும் தனியார் நிறுவனங்களையும்ஊக்கப்படுத்தி சென்னை தீவு திடல், கோவை ,திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் கடல் மீன் உணவு திருவிழா நடத்த வேண்டும்.
20. அண்டை நாடானா இலங்கை இந்தியாவிலிருந்து வரும் *மீன்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட மாசி கருவாடுகள், தளப்பத்து கருவாடுகள் ,கரடி,கொப்பரா கருவாடுகள், வண்ணாத்தி கருவாடுகள், சென்னாக்கூனி, நெத்திலிக் கருவாடு* உள்ளிட்ட *பல மீன்கள் மீன் கருவாடு வகைகளை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளது.இதனால் *ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு மீனவர்களுக்கும் மீன் மற்றும் கருவாடுகள் ஏற்று மதியாளர்களுக்கும் இழப்பு ஏற்படுகின்றது*. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மதிப்பு கூட்டப்பட்ட இவைகளை உலக நாடுகள் முழுவதும் இறக்குமதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21. கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் பொருத்த மற்ற நேரத்தில் உள்ள இந்த மீன்பிடி தடைக் காலத்தை ஏப்ரல், மே, ஜீன் க்கு பதிலாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.
இந்த பிரதான 21 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு மீனவர்களுக்கு ஏற்பாடு செய்து தந்து ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவாணியை* வரும் 5 ஆண்டுகளில் சுமார் 150 கோடியாக அன்னிய செலவாணியாக உயர மாண்புமிகு மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அண்ணன் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள்
இந்த உயர்வுக்கு காரணமாக இருந்தார் என்று இருக்க வேண்டும்.
*தமிழக அரசு மீனவர்களின் அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்க இதை செய்து தர வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
*அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)
















