கல்வி வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க.வினர் பேரணியாகச் சென்று பேரளம் பேரூராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட் தலைவர் முகமது பாரி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன், மாநில இளைஞரணி துணை செயலாளர் நரசிம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போல நன்னிலத்தில் பா.ம.க.வினர் பேரணியாக சென்று நன்னிலம் பேரூராட்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
இதில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் சிவசுப்ரமணியன், நகரதலைவர் மூவேந்தன், மாவட்ட அமைப்பு செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வலங்கைமானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் வேணு. பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் துணைச் செயலாளர்கள் சண்முகவேல், மனோகரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, கிழக்குஒன்றிய செயலாளர் அப்பு., மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வன்னியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க. சார்பில் கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைெபற்றது. போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அழகர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் பழனி, வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் வேலாயுதம், பா.ம.க. கொரடாச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி முத்துப்பேட்டை பேருராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே செல்வம் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி அய்யர், மாவட்ட துணை செயலாளர் சுபசேகர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கல்வி பிரியன், வன்னியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
















