சென்னை ராயபுரம்:
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பனுக்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது*
*ஊரக உள்ளாட்சி தேர்தல் கூட்டணியே நகர்ப்புற தேர்தலிலும் தொடரும்; நேற்றைய நிலை தான் இன்று, நாளைய நிலையை கட்சி தான் முடிவு செய்யும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.*
*தனது சட்டமன்ற தொகுதியையே பாதுகாக்க முடியாத முதலமைச்சர் தமிழகத்தை பாதுகாப்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி*
சென்னை ராயபுரம், திருவிகநகர் தொகுதிகுட்பட்ட பகுதியில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு வழங்கிய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தேர்தல் நியாயமாக, ஜனநாயாக முறைப்படி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,குறிப்பாக திமுக தலையிடில்லாமல் நடைபெற வேண்டும் என்ற அவர் செயற்கையான வெற்றியை கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்றது.
நியாயாமாக வெளிப்படையாக தேர்தல் நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற அவர் 7 மாதத்தில் திமுக அரசின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்பதியும் வெறுப்பும் உண்டாகியுள்ளதாக கூறினார்.
மக்களுக்கு எதுவும் செய்யாமல் விளம்பரத்தை மட்டும் நம்பி உள்ள அரசு திமுக அரசு, அம்மாவின் திட்டங்களுக்கு மூடு விழா செய்யும் நிலையே உள்ளது,
ஆனால் உலகம் உள்ள வரை அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும் என்றார்.
ஆகஸ்ட் மாதத்தில் தூர்வாறவில்லை, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை, மழைக்கு நிவாரணம் அறிவிக்காமல், தேங்கியுள்ள மழை நீரை அகற்றாமல் நத்தை வேகத்தில் கூட ஒப்பிட இயலாத அளவிற்கு செயல்படும் அரசாக இந்த அரசு உள்ளதாக தெரிவித்த அவர் அம்மாவின் அரசு பல்வேறு சாதனை செய்துள்ளது, மக்களுக்கு அதனை எடுத்து சொல்லி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் என்றும் தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் என்ன நிலைபாடோ என்ன கூட்டணியோ அதே தான் தற்போது வரை தொடர்கிறது என கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், ஒரு பெண் தனியாக எப்போது நடந்து செல்கிறாரோ அப்போது தான் முழு சுதந்திரம், ஆனால் திமுக அரசால் இங்கு காவல்துறைக்கே பாதுகாப்பில்லை.
அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது கண்டனத்திற்கு உரியது என்றும், ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்று இதற்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறிய ஜெயக்குமார், இதற்கு திமுக அரசு தான் காரணம் என்று தெரிவித்தார்.
மழைக்கான எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காததால் தான் தற்போது தண்ணீர் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய ஜெயக்குமார் தனது சட்டமன்ற தொகுதியையே பாதுகாக்க முடியாத முதலமைச்சர் தமிழகத்தை எப்படி பாதுகாப்பார் என கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் காவல்துறை அதிகாரியே தனியாக செல்ல முடியாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ள நிலையில், தனிமனித பாதுகாப்பை இந்த அரசு எவ்வாறு உறுதி செய்யும் என்று பேசினார்.
அதேபோல் ஏற்கனவே அம்மா உணவகங்களில் சப்பாத்தி, சாம்பார் சாதம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது, அங்கு பணி செய்பவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை, இதுபோன்ற நிலையில், எதற்கு புதிதாக திமுக தலைவர் பெயரில் எதற்கு உணவகம் என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கருணாநிதி பெயரில் உணவகங்களை திறந்துவிட்டு, ஜெயலலிதா பெயரில் உள்ளதை மூட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று செய்வதாக கூறிய ஜெயக்குமார், இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.















