நாளை முதல் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை.முழு ஊரடங்கு நாட்களிலும் தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்!

0
287

சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக வந்தார் பதவி ஏற்ற பின் முதல் முறையாக ஸ்டான்லி மருத்துவமனை வந்த சுப்பிரமணியனுக்கு சுகாதாரத்துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் பின்னர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன்…,

முதல்வர் அறிவுறுத்தலின் படி ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளேன்.
இங்கு1500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் மிக சிறப்பாக கொடுக்கப்பட்டு வருகிறது .திங்கள் முதல் 500 புதிய ஆக்சிஜன் படுக்கை வசதி பயன் பாட்டுக்குவர உள்ளது.

வரும் 15 ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் புதிதாக 12500 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு விடும் ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் கீழ்பாக்கத்தில் காத்திருப்பதால் நாளை முதல் சேலம், கோவை , மதுரை , திருச்சி திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது..

முழு ஊரடங்கு நாட்களிலும் தடுப்பூசி போடப்படும் கொரோனாவுக்கு சித்தா, ஆயுர்வேதம் போன்ற சிகிச்சை முறை மீண்டும் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தி செய்ய வரும் காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here