சமீபத்தில் நடைபெற்ற 2021-ஆம் ஆண்டிற்கான ஃபைடு இணையவழி ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டியில் இந்திய அணியில் பங்குபெற்று விளையாடிய முகப்பேர் வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மாணவனும் கிராண்ட்மாஸ்டருமான ஆர்.பிரக்ஞானந்தா, மற்றும் மேல் அயனாம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த சதுரங்கச் சாம்பியன் சவிதா ஸ்ரீ, ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
சதுரங்க வீரர்களின் வியக்கத்தக்க இச்சாதனைகளைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா மற்றும் சதுரங்கச் சாம்பியன் சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு முறையே ரூ. 30 லட்சம் மற்றும்
ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
இளம் சதுரங்க வீரர்களின் அளப்பரிய ஈடு இணையற்ற இச்சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது.
















