20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று- ஆய்வில் தகவல்- மக்களிடையே பீதி

0
307

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் தெரிந்துகொள்வதற்காக ஜிப்மர் மருத்துவமனை சமூக ஆய்வை மேற்கொண்டது.

ஜிப்மர் மருத்துவ மனையின் நுண்ணுயிரியல் துறை மற்றும் சமூக நோய் தடுப்பு துறை வல்லுனர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்றவர்களை 30 தொகுப்பாக பிரித்து நகர்ப்புற மற்றும் கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விகிதத்தில் புதுவையில் உள்ள மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஜூலை கடைசி வாரத்தில் புதுவையில் 20 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுவையில் 20 பேரில் ஒருவருக்கு தொற்று இருப்பது குறித்து ஜிப்மர் ஆய்வை வெளியான தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here