திருவள்ளூர் மாவட்ட தலைவராக டில்லி பாஸ்கர் நியமனம் – முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.
முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின் ஓப்புதலோடு , திருவள்ளுர் மாநகரம், பெருமாள் செட்டி தெருவை சேர்ந்த டில்லி பாஸ்கர் அலி இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் திருவள்ளூர் மாவட்ட தலைவராக நியமிக்கபட்டுள்ளார்.
முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் , இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடு பட வேண்டும் , பதவின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட் பட்டு அணைத்து சமுதாய மக்கள் நலனுக்காக செயல் பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
மேலும் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் திருவள்ளூர் மாவட்ட தலைவராக நியமிக்க பட்டுள்ள டில்லி பாஸ்கர் அவர்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.













