கடலூர் முதுநகரில் ராஜா என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரிடம் தினந்தோறும் இமயன் என்பவர் கடனுக்கு மளிகை பொருட்களை கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் கடனுக்கு மளிகைப் பொருட்களை கேட்டு வீச்சரிவாள் உடன் வந்து அவர் மிரட்டும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. . இது குறித்து காவல்துறையினர் புகார் கொடுத்த முன்னமே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது வீச்சரிவாள் உடன் வந்து அவர் மிரட்டி இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது தற்போது இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சியையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடனுக்கு மளிகை பொருட்களை கேட்டு வீச்சரிவாளுடன் மிரட்டும் நபர் குறித்து சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.













