கண்டெய்னர் லாரி மோதி உயிரிழந்த இளம் தம்பதியினர்;

0
405

சென்னை, எண்ணூர் விரைவு சாலையில் ஓடிய கண்டெய்னர் லாரி மோதி இளம் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்(31) இவர் மனைவி பனாசீருடன்(28) எண்ணூரில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எண்ணூர் விரைவு சாலை முழுவதும் கண்டெய்னர் லாரிகளின் ஆக்கிரமிப்பினால் எவ்வாறு செல்வது என்று திகைத்துப் போயுள்ளனர்.
அனைத்து வழிகளிலும் கண்டெய்னர் லாரிகள் நின்று கொண்டிருந்ததால் பொறுமையாக சென்று கொண்டிருந்த இளம் தம்பதிகளை முந்திச் செல்ல பின்னே வந்த கண்டெய்னர் லாரி வேகமாக செல்லவே அவர்கள் மீது மோதியது. இரண்டு கண்டெய்னர் லாரிகளுக்கு நடுவே சிக்கி கொண்ட இளம் தம்பதியினர் மீது டயர் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து உடனடியாக கண்டெய்னர் லாரி ஓட்டுநர் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெகுநேரம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த நபர்கள் அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகளை கற்களால் வீசி அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி உறவினர்களிடம் சமரசம் பேசினர். அதன் பின்பு மறியலை கைவிடப்பட்டனர். இறந்த தம்பதியினர் உடலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இறந்த இளம் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here