பொன்னேரி முதல் காணியம்பாக்கம் வழியாக ஊரணம்பேடு வரை புதிய பேருந்து சேவை:

0
250

ஏப்-2  -பொன்னேரி முதல் காணியம்பாக்கம் வழியாக ஊரணம்பேடு வரை புதிய பேருந்து தட சேவை தொடக்கம்.
2 எம்.எல்.ஏக்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி முதல் காணியம்பாக்கம் வழியாக ஊரணம்பேடு வரை டி.44 எனும் அரசு பேருந்து புதிய தட சேவை துவக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் பொதுமக்கள் நீண்ட நாட்களாக இது குறித்து கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து தடத்தில் பேருந்து சேவை துவக்கப்பட்டது. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராசன் ஆகியோர் கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கினர். பொன்னேரியிலிருந்து புறப்பட்டு மீஞ்சூர்,கல்பாக்கம்,தேவதானம் காண்டியம்பாக்கம்,திருவெள்ளைவாயல் வழியாக ஊரணம் பேடு வரை இயங்கும் இந்த தளத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சலுகை கட்டணமும் பொருந்தும். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி,மாவட்ட கவுன்சிலர் தேசராணி தேசப்பன்,காணியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன்,ஒன்றியக் கவுன்சிலர் மாதவி தன்சிங்,காணியம் ஜலந்தர்,ஆரணி சுகுமார் உள்ளிட்ட ஏராளமான இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here