பெருங்குளம் மண்ணில் படைப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா !

0
10

தாமிரபரணி தோன்றிய நாளில் பெருங்குளம் மண்ணில் படைப்பாளர்களுக்கு விருது வழங்கும் விழா !
பெருங்குளம் அ. மாதவையா மறைந்த நூற்றாண்டு நினை வேந்தல் மற்றும் படைப்பாளிகளுக்கு படைப்பாளுமை விருது வழங்கும் விழா, தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தின் சன்னதிதெரு பஜனை மடத்தில் மே.30 தாமிரபரணி தோன்றிய வைகாசி விசாக நாளில், சிறப்பாக நடந்தேறியது. அ. மாதவையாவின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பெருங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் மருத்துவர் திருமதி எஸ்.பி.எஸ். புவனேஸ்வரி தலைமையில் நடை பெற்ற விழாவில், மேனாள் தேர்வு நிலை ஊராட்சி செயல் அலுவலர் எழுத்தாளர் பெருங்குளம் கே.ஆர். பி. மணிமொழிச்செல்வன் வரவேற்று பேசினார்.

பெருங்குளம் ஊரின் சான்றோர் பெருமக்கள் சோ. கண்ணன் ஐய்யங்கார், ப. ஆறுமுகப்பாண்டியன், கு கதிர்வேல், ம. பேச்சிமுத்து உள்ளிட்ட பலரும் முன்னிலை வகுத்து சிறப்பித்தனர்.

தாமிரபரணி இலக்கியப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான இதழாளர் இசைக்கும்மணி அறிமுக உரையாற்றினார் . பேராசிரியர் மா. காசிராஜன், எழுத்தாளர் ஜி. ஆறுமுகப் பெருமாள், கலை இலக்கியப் பெரு மன்றத்தின் மாரிமுத்து , நெல்லை தேவன், சாகுல் அமீத், அருட்சகோதரி மேரி பெட்ஸி , அம்பை பரத்வாஜ் , உள் ளிட்டோர் வாழ்த்துரைத்து பேசினர். சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பன்முக படைப்பாளர் – ஆய்வாளர் முனைவர் எம்.எஸ். இளங்கோமணி, வாழ்வியல் தத்துவ எழுத்தாளர் கே. ஆர்.பி. மணிமொழிச்செல்வன், இதழாளர்- சமூக ஆர்வலர் பொ. பாலசுப் பிரமணியன், ஹைக்கூ – தன்முனை க் கவிஞர் ஆத்தூர் சாகுல், வரலாற்று ஓவியக் கலைஞர் வரகுணன் உள்ளி ட்ட ஐவருக்கும் படைப்பாளுமை விரு தும் ரூ.ஆயிரம் பொற்கிழி பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழ் இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளர் பெருங்குளம் அ. மாத வையா பிறந்து வளர்ந்து மறைந்த, தாமிரபரணிக்கரை மண்ணில், தாமிர பரணி இலக்கியப் பேரவை நிகழ்வு நடைபெறுவது ,மாதவையாவுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

பெண்கல்வி, விதவைத் திருமணம் எனும் பெண்களுக்கான முற்போக்கு கோட்பாடுகளை, தனது படைப்புகள் மூலம் வலியுறுத்திய அ.மாதவையா, அவரது படைப்புகளுக்காக நூற்றாண்டுகளுக்கு முன்னமே பெரி தும் பாராட்டப்பட்டவராகத் திகழ்தார்.

இலக்கியம் என்பது சமூக அறத்தை, மனிதநேய மாண்புகளை எடுத்துரைப் பதாக இருக்க வேண்டும். அத்தகைய படைப்புகளே காலத்தை வென்றிருப் பதாக இருக்கும் . அத்தகைய படைப்பு களின் படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றி பாராட்டுவது நம் சமூகத்தின் கடமையாக இருக்க வேண்டும்.

அவ்வகையில், தாமிரபரணிக்கரை இலக்கிய முன்னோடிகளையும் துளிர்த்து வளர்ந்து வரும் படைப்பா ளர்களையும், அவர்களது படைப்பாளு மைகளையும் பாராட்டி, சிறப்பு செய்து அப்படைப்பாளர்களை சமூகத்துக்கு இனம் காட்டுவதும் ,அடையாளப்படுத்தி மேன்மைப்படுத்துவதும் தாமிரபரணி இலக்கியப் பேரவை உள்ளிட்ட கலை இலக்கியப் பெருமன்றங்களின் முத ன்மைச் செயற்பாடாகும்.

தாமிரபரணி தோன்றிய வைகாசி விசாக நாளில், தமிழ் இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளரான பெருங் குளம் அ.மாதவையா பிறந்துவளர்ந்து மறைந்த மண்ணில் அவரது நினை வேந்தலையும், படைப்பாளர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வை யும் நடத்துவது பாராட்டுக்குரியது என பலரும் பேசினர்.

விருது பெற்ற படைப்பாளர்கள் ஏற்பு ரைத்து பேசினர் முடிவில் தாமரபரணி இயக்கியப் பேரவையின் ஒருங்கி ணைப்பாளர் கவிஞர் ஏரல் ராஜன் நன்றி தெரிவித்தார் . விழாவில் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், ,ஊர்ப் பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
– இதழாளர் இசைக்கும்மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here