பல்லாவரம் திரிசூலம் மலை கல் குட்டையில் மூழ்கி. திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு இளைஞர் மரணம்;

0
461

பல்லாவரம் திரிசூலம் மலை கல் குட்டையில் மூழ்கி. திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு இளைஞர் மரணம்;
திருவள்ளுர் மாவட்டத்தில் திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வசிப்பவர் ஆகாஷ்(23).இவர் முன்னால் சமூக சேவகரும் மறைந்த ஜவாரிலால் லூனியா என்பவரின் பேரனும்,கியான்சந்த் லூனியா என்பவரின் மகனாவார்.ஆகாஷ் Visual Communication படித்து வந்தார்.
நேற்று ஆகாஷ் மற்றும் இவர் கல்லூரி நண்பர்கள் ஆவடி தினேஷ்குமார்(23),கேரளா நிரஞ்சன்(23),அரும்பாக்கம் செல்வகுமார்(23) என நான்கு பேரும் நேற்று 01.02.2021 அன்று பல்லாவரம் மலைக்கு இயற்கையை ரசித்து புகைப்படம் எடுக்க விரும்பி வந்துள்ளனர்.பல்லாவரம் மலைக்கு அருகே ஆபத்தான நிலையில் பல கல்குவாரி நீர் குட்டைகள் இருக்கின்றன.இவர்கள் நான்கு பேரும் ஒரு தண்ணீர் நிரம்பிய ஆபத்தான கல்குட்டைக்கு சென்று அதான் அருகே சென்று பல கோணங்களில் அழகிய புகைப்படங்களை எடுத்து உள்ளனர்.திடீரென கால் வழுக்கி தடுக்கி ஆகாஷ் தண்ணீரில் விழுந்து தத்தளித்து உயிருக்கு போராடினார்.அவர் நண்பர்கள் செய்வதறியாது திகைத்தனர்.உடனே ஒரு நண்பரான தினேஷ்குமார் முடிந்த வரை தன் கையை நீட்டி காப்பாற்ற கடுமையாக போராடி உள்ளார்.ஆனால் அவரும் நிலைதடுமாறி கல்குட்டையில் விழுந்து உயிருக்கு போராடி போராடி தண்ணீரில் மூழ்கி விட்டனர்.மற்ற நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர்.தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.நேற்று இரவு நீண்ட நேரமாகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.மீண்டும் இன்று அதிகாலை தேடுதல் பணி தொடங்கியது.கடின தேடலுக்கு பிறகு ஆபத்தான அந்த மலை கல்குட்டையில் இருந்து இருவர் உடலும் கைப்பற்றப்பட்டது.நண்பரும் நண்பரை காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்தது பொது மக்களை பெறும் சோகத்தில் ஆழ்த்தியது.பல்லாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொன்டு உள்ளனர்.பள்ளிப்பட்டு ஆகாஷ் குடும்பம் பல்வேறு காலகட்டங்களில் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்த குடும்பம்.இந்த கோரோணா காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு பசி போக்கிய குடும்பம்.இப்படிப்பட்ட இந்த குடும்பத்திற்க்கு ஏற்பட்ட இந்த இழப்பு பள்ளிப்பட்டு பொது மக்களை மனதளவில் பாதித்துள்ளது..
பல்லாவரம்-திரிசூலம் போன்ற பகுதிகளில் உள்ளது போன்ற ஆபத்தான கல்குவாரிகளை மூட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவர் வேண்டுகோள்.- நிருபர்
K.S.திலீப்
பள்ளிப்பட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here