புத்தாண்டை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு கேக் வெட்டி காவலர்கள் அனைவருக்கும் கேக்,இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்:

0
352

குடியாத்தம், ஜன.1-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணைகோட்டத்தில் உள்ள காவலர்கள் புத்தாண்டை முன்னிட்டு இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் புத்தாண்டை முன்னிட்டு இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை சந்தித்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கேக் வெட்டி காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் கேக்,இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கேக் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியதாவது எல்லோரும் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடி வரும் வேளையில் புத்தாண்டை முன்னிட்டு இரவு முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை காக்கும் பொருட்டு விழித்திருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இரவு பகல் பாராமல் பணியாற்றும் காவல் துறையினர் வரும் ஆண்டில் குற்றங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் வரும் ஆண்டு நன்மை பயக்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியின்போது வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சேகர்,குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி,டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி,போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், நகர மன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு உள்பட ஏராளமான போலீசார் உடனிருந்தனர்.
தொடர்ந்துகாவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி புத்தாண்டை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here