வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை அமைந்துள்ள தெருவில் இருபுறமும் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் இந்த ஆக்கிரமிப்புகளால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாக்குவதாகவும்,போக்குவரத்து இடையூறாக இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து அரசியல் கட்சியினர்,பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அரசு மருத்துவமனை தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், போக்குவரத்துக் இடைஞ்சலாக உள்ள வாகனங்களையும் அகற்றுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்,.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி,சப் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ்,முரளி உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசாரின் மீட்டு வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் வாகனங்களும் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றப்பட்டது அப்போது மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவரது உறவினர்,பொதுமக்கள் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து மீட்பு வாகனத்தில் ஏற்றினால் எப்படி, நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் வாகனங்கள
எங்கு நிறுத்துவது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் தொடர்ந்து இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளும் வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதாக உயர் அதிகாரிகளுக்கு சென்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை என தெரிவித்தனர்.மருத்துவ அலுவலரிடம் கோரிக்கை
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன் பாபு உடன் சென்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாகனங்களை அரசு மருத்துவமனைக்குள் உள்ள காலி இடத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர் மேலும் நோயாளிகளின் வாகனங்களை போலீசால் பறிமுதல் செய்தால் நோயாளிகள் எப்படி வருவார்கள் எப்படி திரும்பி வீட்டிற்கு செல்வார்கள் ஏழை எளிய மக்கள் அதிக அளவு அரசு மருத்துவமனைக்கு வருவதால் அவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டால் எப்படி என கேள்வி எழுப்பினர் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து மீட்பு வாகனத்தில் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி














