7/8/2025 அன்று திருப்பூா் மாவட்டம் கே.செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் குப்புசாமி தொழில் அதிபா் இவரது மனைவி சுகந்தி இந்த தம்பதியின் மகள் பிரீத்தி வயது (26) இவருக்கும் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சோ்ந்த சதீஸ்வா்வயது (30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது திருமணத்தின் போது பிரீத்திக்கு 120 பவுன் நகை சொகுசு காா் ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோா் கொடுத்ததாக சொல்ல படுகிறது கணவா் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக் கொண்டு கடந்த மாதம் 11ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூாில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு வந்துள்ளாா் பிரீத்தியுன் பெற்றோா் சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனா் இதில் பிரீத்தியின் பங்காக ரூ 50 லட்சம் வந்துள்ளது அந்த பணத்தை சதீஸ்வா் தனக்கு கொடுக்கும்மாறு மனைவிடம் தொடா்ந்து கேட்டதாக தொிகிறது இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில்.சோகமாக இருந்து வந்துள்ளாா் இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரித்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா் சம்பவம் பற்றி அறிந்தும் நல்லூா் போலீஸ்சாா் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூா்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்
வரதட்சனை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினா் உறவினா்கள் குற்றம் சாட்டினா் மேலும் பீரித்தியின் கணவா் வீட்டாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் பிறகு தான் உடலை வாங்குவோம் என உறவினா்கள் போரட்டத்தில் ஈடுபட்டனா் புகாா் தெரிவிக்கப் பட்டதை தொடா்ந்து திருப்பூா் R T O மோகனசுந்தரம் பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினா் இந்நிலையில் நல்லூா் போலீஸ் கணவா் சதீஸ்வா் மாமனாா் விஜயகுமாா் மாமியாா் உமா ஆகியோாிடம் விசாரணை நடத்திய நிலையில் 3 பேரையும் கைது செய்தனா் மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்
(திருப்பூா் செய்தியாளா்
s.சக்திவேல்)














