உடைப்பு! உடைப்பு!தொலைந்து போன காலம் மீண்டு வருமா…

0
205

¶ நட்பு உடைந்து,
முக நூலானது …

¶ சுற்றம் உடைந்து,
வாட்சப் ஆனது …

¶ வாழ்த்துக்கள் உடைந்து,
ஸ்டேட்டஸ் ஆனது …

¶ உணர்வுகள் உடைந்து,
ஸ்மைலியாய் ஆனது …

¶ குளக்கரை உடைந்து,
குளியலறை ஆனது …

¶ நெற்களம் உடைந்து,
கட்டிடமானது …

¶ கால நிலை உடைந்து,
வெப்பமயமானது …

¶ வளநிலம் உடைந்து,
தரிசாய் ஆனது …

¶ துணிப்பை உடைந்து,
நெகிழியானது …

¶ அங்காடி உடைந்து,
அமேசான் ஆனது …

¶ விளை நிலம் உடைந்து,
மனை நிலம் ஆனது …

¶ ஒத்தையடி பாதை உடைந்து,
எட்டு வழியானது …

¶ கடிதம் உடைந்து,
இ -மெயிலானது …

¶ விளையாட்டு உடைந்து,
வீடியோ கேம் ஆனது …

¶ புத்தகம் உடைந்து,
இ-புக் ஆனது …

¶ சோறு உடைந்து
‘ஓட்ஸ்’ சாய்ப் போனது…

¶ இட்லி உடைந்து,
பர்கர் ஆனது …

¶ தோசை உடைந்து,
பீட்சாவானது …

¶ குடிநீர் உடைந்து,
குப்பியில் ஆனது …

¶ பசும் பால் உடைந்து,
பாக்கெட் பால் ஆனது …

¶ வெற்றிலை உடைந்து,
பீடாவானது …

¶ தொலைபேசி உடைந்து,
கைப்பேசியானது …

¶ வங்கி உடைந்து,
பே டி எம் ஆனது …

¶ நூலகம் உடைந்து,
கூகுளாய் போனது …

¶ புகைப்படம் உடைந்து,
செல்ஃபியாய் ஆனது …

¶ மனிதம் உடைந்து,
மத வெறியானது …

¶ நல்ல அரசியல் உடைந்து,
அருவெறுப்பானது …

¶ பொது நலம் உடைந்து,
சுயநலமானது …

¶ பொறுமை உடைந்து,
அவசரமானது …

¶ ஊடல் உடைந்து,
விவாகரத்தானது …

“*நிரந்தரம் உடைவது நிதர்சனம்…* ஆகையால்,
உடைவது உலகினில்
நிரந்தரமானது” ..!

எல்லாவற்றையும் இழந்து புலம்பிக் கொண்டு இருக்கின்றான்,
இன்றைய கால மனிதன்….

தொலைந்து போன காலம் மீண்டு வருமா…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here