திருநங்கைகள் நடத்திய கொரோனா விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

0
344

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறையினருடன் இணைந்து திருநங்கைகள் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாரிமுனை பகுதியில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாரிமுனை நாராயணப்பா தெருவில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சகோதரன் திருநங்கைகள் அமைப்பினர் வில்லுப்பாட்டு பாடி அப்பகுதி மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியை மாநகராட்சி அதிகாரி பிலிப்ஸ், காவல்துறை சப்இன்ஸ்பெக்டர் முருகன், ஊர் தலைவர் சோமசேகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த விழிப்புணர்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு களித்தனர்.

இதில் திருநங்கை கோதை வில்லுப்பாட்டு பாடினார். மேலும் சகோதரன் திருநங்கைகள் அமைப்பின் திட்ட இயக்குநர் ஜெயா, திட்ட மேலாளர் ரக்சிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொருக்குப்பேட்டை பகுதிகளில் பட்டா கத்தியுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைது.
சென்னை, கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதிகளில் ரவுடிகள் கத்தியுடன் வலம் வருவதாக காவல்துறைக்கு இரகசிய கிடைத்தது. இதனையடுத்து, ஆர்.கே.நகர். காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பட்டா கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களோடு சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்கும் பொழுது கார்னேசன் பகுதியைச் சார்ந்த கோடீஸ்வரன், பத்தா, அஜித் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த ஆறு பட்டாக்கத்தி அருவா போன்ற ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோடீஸ்வரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மூவரையும் ஆர்.கே. நகர். காவல் துறையினர் கைது செய்து புழல் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here