இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது;பதிவு: மார்ச் 23, 2021 17:38 ISTமாற்றம்: மார்ச் 23, 2021 20:21 IST

0
238

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று இன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது.

அப்போது இந்தியா உள்பட 14 நாட்கள் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணித்தன. வங்காளதேசம், பொலிவியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வெனிசுலா உள்பட 11 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், நமிபியா, கேமரூன், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here