தண்டையார்பேட்டையில் 17 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது

0
364

சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனை வெட்டிக்கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு பகுதியில் சீனா என்கிற சீனிவாசனை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தண்டையார்பேட்டை மாதா கோவில் தெருவில் வைத்து ஓட ஓட வெட்டி கொன்றனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டபோது சீனிவாசனை வெட்டிய 6 பேர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வரதன், சந்துரு என்கிற சந்திரசேகர், பாபா என்கிற பார்த்திபன், சசிகுமார் என்கிற snake சசி , பார்த்திபன் என்கிற தக்காளி ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக சீனாவை வெட்டியதாக ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது எடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here