சாகர் பரிகிரமா IX 2023 நிகழ்ச்சி மத்திய மீனவளத்துறை அமைச்சர் மாண்புமிகு பர்ஷோத்தம் ரூபாலா ஜீ அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம் டி தயாளன் பரதவர் மற்றும் நிர்வாகிகலுடன் கலந்து கொண்டு கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர மனு கொடுக்கப்பட்டது.இந்த மனுவில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1) சென்னை காசிமேடு மீன் பிடித்துறை முகம் சென்னை துறைமுக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது அதனால் வளர்ச்சி திட்டங்கள் சென்னை துறைமுகத்தின் அனுமதியோடும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறையின் சார்பில் இருவரும் இணைந்து வளர்ச்சி திட்டங்களை செய்யும் நிலை உள்ளது. அதனால் பல வளர்ச்சி திட்டங்கள் நிகழ்த்துவதற்கு சிக்கல்கள் உருவாகின்றன. பல திட்டங்கள் மீனவர்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. எனவே இந்த சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தை சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் மீன்பிடி துறைமுகம் என பெயர் கூட்ட வேண்டும் எனவும். தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இந்த மீன்பிடி துறைமுகத்தை பராமரித்துக் கொள்வதற்கு இத்துறைமுகத்தை தமிழ்நாடு மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும்.
2) இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள விசைப்படகுகள் 24 மீட்டர் நீளமும் 240 குதிரை திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட விசை படகுகள் தமிழ்நாடு மீன்வளத்துறை மூலமாக அனுமதி வழங்கப்பட்டு மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் 24 மீட்டருக்கு மேல் 240 குதிரை திறனுக்கு மேல் உள்ள விசைப்படகு காலத்தின் கட்டாயதால் ஆழ்கடல் மீன்பிடிப்பை தொடர நினைத்தால் மத்திய அரசின் சட்ட திட்டமாக MS act சட்ட திட்டத்திற்கு உட்பட்டு உள்ளதால். வர்த்தக கப்பல்களில் உள்ள சட்டதிட்டத்துக்குட்பப்பட்டு குரூஸ்களை நியமிப்பதும் மாஸ்டர், என்ஜின் டிரைவர், போஷன் மேலும் மெர்கண்டைல் மெரின் கல்வி நிறுவனம் மூலமாக பயிற்சி எடுத்தவர்கள் இந்த படகுகளில் பயணிக்கும் நிலை உள்ளது. இதை தளர்த்தி தற்சமயம் சிப் நெட் மூலமாக டிரைவர் லைசன்ஸ் பெற பயிற்சி கொடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் மூலமாக லைசென்ஸ் வழங்கப்பட்டு மீன் பிடிக்கச் செல்லக்கூடிய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவது போல். சட்டத்தை தளர்த்தி வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
3) தற்சமயம் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் நோக்கி மீன் பிடிக்க செல்வதால் அவர்களுக்கு RT Radio telephone ஒவ்வொரு படகுகளுக்கும் தேவைப்படுகிறது. இதை வழங்குவதில் பெறுவதில் சிரமம் உள்ளது. இந்த கருவியை பெறுவதற்கு ரேடியோ ஆப்ரேட்டர் லைசன்ஸ் இருப்பவர்கள் இருந்தால் மட்டுமே இந்த கருவியை வாங்க முடியும் லைசன்ஸ் பெற முடியும் அவர்களை மீனவர்கள் வேலைக்கு அமர்த்தும் போது அதிக சம்பளம் வழங்கி வேலை கொடுக்கும் நிலை உருவாகும். எனவே பக்கத்து நாடான இலங்கையில் உள்ள படகுகளில் கொடுக்கப்பட்டுள்ள சில சேனல்கள் மட்டும் கொண்ட RT radio telephone வழங்குவதற்கு அரசு பரிசிலிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அமைச்சர் அவர்களிடம் நாங்கள் முன் வைக்கிறோம்.
இந்த மனுவை பரிசீலனை செய்து எங்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
.(டாக்டர் எம் டி தயாளன் பரதவர் தலைவர் இந்திய மீனவர் சங்கம்..
www.indianfisherman.org)
Home Uncategorized சென்னை காசிமேடு துறைமுகத்தில் சாகர் பரிகிரமா IX 2023 நிகழ்ச்சி மத்திய மீனவளத்துறை அமைச்சர் மாண்புமிகு...















