சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி வார்டு எண்-73 பெரியார் நகரில்,தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.81.64 கோடி மதிப்பில் 448 புதிய குடியிருப்புகளை அதே இடத்தில் கட்டுவதற்காக மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள், உடன் கழக அயலக அணி தலைவரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் இணைந்து அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றபோது.
இந்நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன்,திரு.வி. க. நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.தாயகம்கவி, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி.பிரியா ராஜன், திரு வி க நகர் தெற்கு பகுதி செயலாளர் திரு.எம்.சாமிகண்ணு, திரு.வி.க.நகர் வடக்கு பகுதி செயலாளர் செ. தமிழ்வேந்தன், வட்டக் கழகச் செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.














