சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சலுகை விலையில் டயாலிசிஸ் சென்டர் புதிதாக திறக்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் நேற்று மதியம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆகியோர் கலந்து கொண்டு டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தனர் அதை தொடர்ந்து மா. சுப்பிரமணியன், பேசியதாவது வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்கனவே மகப்பேறு மருத்துவமனை நடத்தி வருகிறார்கள் அதனைத் தொடர்ந்து ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 500 ரூபாய்க்கு டயாலிசிஸ் செய்யும் இந்த மையத்தை தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன் தமிழ்நாடு முழுவதும் 1100 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது மேலும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 306 டயாலிசிஸ் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது தற்போது 500 ரூபாய்க்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது இதனை அரசே முழு செலவையும் ஏற்க பரிசீலனை செய்யப்படும் திமுக ஆட்சியில் இருந்தபோது இதே வியாபாரிகள் சங்கத்தினர் பிராட்வேயும் எம்சிரோட்டையும் இணைக்கும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனை அருகில் சுரங்க பாலம் அமைத்து தர கோரிக்கை வைத்தனர் அதனை ஏற்று 5 கோடியே 47 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது இதனால் வியாபாரிகளுக்கு தொழில் ரீதியாக நல்ல பயனை அளிக்கிறது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரின் நடவடிக்கையின் பெயரில் ஆன்மீக மாநாடு நடத்தினார் அது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது இதனைப் பலர் பாராட்டி வருகிறார்கள் அதேபோல் சிஎம்டிஏ திட்டம் மூலம் வடசென்னை வளர்ச்சிக்காக ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான திட்டங்களை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார் ஒவ்வொரு வளர்ச்சி பணிகளும் தற்போது நடந்து வருகிறது அதன் அடிப்படையில் எம் சி ரோட்டில் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது திராவிட மாடல் அரசு எல்லோருக்கும் எல்லாம் என்று சிறப்பாக முதலமைச்சர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் பேசினார் இந்த நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர் டி சேகர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, திமுக பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெப தாஸ் பாண்டியன், செந்தில்குமார், வ.பெ. சுரேஷ், வியாபாரிகள் சங்கத் தலைவர் பியரிலால் ஜெயின், சங்க செயலாளர் முகமது பஷீர் மாரியப்ரபன் மற்றும் திமுகவினர் வியாபார சங்கத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
















