ஆம்புலன்ஸ்க்கு தானாக வழி கொடுக்கும் தானியங்கி சிக்னல் சோதனை ஓட்டம் ;

0
179

கோபி பொறியியல் மாணவர் ஆம்புலன்ஸ்க்கு தானாக வழி கொடுக்கும் தானியங்கி சிக்னல் வடிவமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்பாக சோதனை ஓட்டம்.

கோபியைச் சேர்ந்த மாணவர் கவின் நடராஜ் என்பவர் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் முதுநிலை பொறியியல் படித்துக் கொண்டுள்ளார்.
மேற்படி மாணவர் தன்னுடைய கண்டுபிடிப்பான தானியங்கி போக்குவரத்து சிக்னலை வடிவமைத்து நேற்று 18.08.24 ம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு
ஜவகர், ஐபிஎஸ் அவர்களிடம் முன்னோட்டம் செய்து காட்டியுள்ளார்.
மேற்படி மாணவரிடம் தானியங்கி போக்குவரத்து சிக்னலை பற்றி விவாதித்த போது பொதுவாக விபத்துகளில் மற்றும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்கள் செல்லும் போது காவல்துறையினர் ஆம்புலன்சை பார்த்த பிறகு சிக்னலை கட்டுப்படுத்தி ஆம்புலன்ஸ்க்கு வழி விடும் சூழ்நிலை நிலவி வருவதாகவும், மேற்படி சம்பவத்தின்போது சில நிமிடங்கள் சிக்னலில் ஆம்புலன்ஸ் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் வகையில் உள்ளதாகவும், மேற்படி கால தாமதத்தின் காரணமாக உயிருக்கு ஆபத்தான உள்ள நிலையில் உள்ளவர்கள் 30 சதவீதம் இறப்பு நேரிடுவதாகவும், மேற்படி உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு, மேற்படி மாணவர் கவின் நடராஜ் ஒரு தானியங்கி சிக்னலை வடிவமைத்துள்ளார்.

( AAA ) Automatic Ambulance Alert system, என பெயரிட்டுள்ளார்.

மேற்படிDivice சிக்னல் அவசர காலங்களில் வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஒரு சிப்பை பொருத்தியும், சிக்னலில் தான் கண்டுபிடித்த டிவைஸை பொருத்திவிட்டால், வாகனம் வரும் வழியில் மேற்படி டிவைஸ் உதவியுடன் ஆம்புலன்ஸ் செல்லும் திசைக்கு ஏதுவாக சிக்னல் திறக்கப்பட்டு (Green signal) இருந்தாலும் பச்சை விளக்குகள் எரிந்தும் மேற்படி ஆம்புலன்ஸ்க்கு வழி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்வது எளிதாகும் எனவும், இதன் மூலம் உயிரிழப்புக்கள் குறைந்தபட்சம் 50 சதவீதம் தடுக்கப்படும் எனவும் மாணவர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற பிறகு சிக்னல் தானாக இயங்கி பழைய நிலைக்கு திரும்பி அந்தந்த வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார்.
அவசர வாகனம் வரும் இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே மேற்படி சாலையில் ஆம்புலன்ஸ் வருகிறது, வழிவிடுங்கள் என சிக்னலில் நின்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளிடம் எடுத்துரைக்கும் வகையில் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

மேற்படி தானியங்கி போக்குவரத்து சிக்னலை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர் ஐபிஎஸ் அவர்கள் முன்பாக மேற்படி மாணவர் கவின் நடராஜ் முன்னோட்டம் (Demo) செய்து காட்டினார்,
மேற்படி மாணவரை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி சென்றார்.
மேலும் கோபி, DSP, ஆய்வாளர், மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மேற்படி தானியங்கி சிக்னலை மேம்படுத்த அறிவுரை வழங்கி சோதனை ஓட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here