காமராஜர் துறைமுகத்தின் சமூக பொறுப்பு நிதி (CSR) மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம்

0
210

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு -11 பூங்காவனம் நகரில் (மண்டல அலுவலகம்) காமராஜர் துறைமுகத்தின் சமூக பொறுப்பு நிதி (CSR) மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணிக்கு
சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டலக் குழுத் தலைவரும், திருவொற்றியூர் கிழக்குப் பகுதிக் கழகச் செயலாளருமான தி.மு.தனியரசு MC ஆகியோர் முன்னிலையில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ,திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் வை.ம.அருள்தாசன், வட்டக் கழகச் செயலாளர்கள் திரு.குறுத்து முனுசாமி,எஸ்.தமிழ்ச்செல்வன், மாமன்ற உறுப்பினர் திருமதி. சரண்யா கலைவாணன்,தமிழரசன் என்கிற தம்பையா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு நிதி துறையின் பொது மேலாளர் திரு. கலைவாணன், மண்டல அலுவலர் மற்றும் கழக நிர்வாகிகள் குறிஞ்சி எஸ் கணேசன்,வழக்கறிஞர் சந்திரபோஸ், ஆர் சி ஆசைத்தம்பி எம்.வி.குமார் கே. பிரபாவதி, இரா. குமரேசன்,பி.எஸ்.சைலஸ்,ஒய். நந்திவர்மன் முருகா எஸ்.ஆறுமுகம்,இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். டி..மதன்குமார்,பா.பாலஉமாபதி,டி.பி.பாலசுந்தரம், உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here