அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன் உடலிற்க்கு தலைவர்கள் ஸ்டாலின் ஓபிஎஸ் இபிஎஸ் சசிகலா ஆகியோர் அஞ்சலி:

0
393

 

அதிமுக அவைத் தலைவராக இருந்தவர் இ.மதுசூதனன் வயது 81 இவர் தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவில் வசித்து வருகிறார் இவரது மனைவி ஜீவா பள்ளி ஆசிரியராக இருந்தவர் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி இறந்து விட்டார் மதுசூதனனுக்கு குழந்தைகள் இல்லை மதுசூதனன் இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வந்தார் கடந்த 2 மாதங்களாக உடல் நோய் நோய்வாய்ப்பட்டிருந்தார் கடந்த மாதம் 19ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதுபட்டதால் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் சசிகலா மற்றும் முன்னணி தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டு இருந்தது மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் மரணம் அடைந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது அவரது உடல் இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் தண்டையார்பேட்டை கொண்டுவரப்பட்டது அங்கு தொண்டர்களும் அதிமுக தலைவர்களும் பல்வேறு கட்சியினரும் இறுதி மரியாதை செலுத்தினர் மதுசூதனன் அதிமுக தொடங்கப்பட்டது முதல் அந்தக் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்துவருகிறார் எம்ஜிஆர் மீது மிகவும் பாசம் கொண்ட ஒரு ரசிகர் ஆகவே விளங்கி வந்தார் வடசென்னையில் பல எம்ஜிஆர் மன்றங்கள் தொடங்க அவர் காரணமாக இருந்தார் அதிமுக தொடங்கப்பட்ட முதல் தீவிர உறுப்பினராக பணியாற்றி வந்தார் 48 முறை போராட்டங்களுக்காக சிறை சென்றுள்ளார் ஜெயலலிதா அமைச்சரவையில் உணவு மற்றும் கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார் அவரது திருமணத்தைப் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நடத்தி வைத்தனர்  ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அதிமுக செயலாளராக பணிபுரிந்துள்ளார் அவரை அஞ்சாநெஞ்சன் என முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  அடைமொழி சூட்டி இருந்தார் எந்த மேடையில் அவர் பேசினாலும் கட்சி கொடி கட்டும் தொண்டர்களே அதிமுகவிற்கு முதுகெலும்பு பலம் என்ற வாக்கியத்தை மறவாமல் குறிப்பிடுவார் இதனால் சாதாரண தொண்டர்கள் பெயரைக் கூட அவர் பெயர் சொல்லி அழைப்பார் அவர் தொண்டர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரை அவர் வளர்த்து விட்டார் குறிப்பாக டி ஜி வெங்கடேஷ் பாபு ஆர் எஸ் ராஜேஷ் போன்ற போன்றவர்கள் வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்தார் ஆர் கே நகர் தொகுதியில் ஒரு முறை வெற்றி பெற்றார் மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் அதிமுகவில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் கொள்கை பரப்பு செயலாளர்என பல பதவிகள் வைத்துள்ளார் 2007 முதல் அதிமுக அவைத் தலைவராக பணியாற்றி வந்தார் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓ பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஆட்சித் தலைமையும் கட்சித் தலைமையும் ஒருவரே இருக்கவேண்டுமென முதன்முதலாக முன்னாள் அமைச்சர் ஆர் பி.உதயகுமார் தீர்மானம் இயற்றயதை மதுசூதனன் முதன்முதலில் சசிகலாவிடம் வழங்கினர் ஓபிஎஸ் தனியாக பிரிந்த போது அவருக்கு ஆதரவளித்தவர்களில் முக்கியமானவர் அதிமுக கட்சியில் ஏற்பட்ட சர்ச்சையில் அவைத்தலைவர் இ மதுசூதனன் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இருக்கும் அணி தான் உண்மையான அதிமுக எனக்கூறி சின்னம் வழங்கப்பட்டது
அவரது மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அதிமுக கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் அவருடன் தமிழக அமைச்சர்கள் பிகே சேகர்பாபு மா சுப்பிரமணியன் உடன் வந்தனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இடம் அவரது மரணம் குறித்து விசாரித்து அறிந்தார் அவரது குடும்பத்தினரிடம் மரணம் குறித்து விசாரித்து அறிந்தார் மத்திய அமைச்சர் எல். முருககன் இரங்கல் தெரிவித்துள்ளார் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது உடலுக்கு எடப்பாடி கே பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் தமிழக அமைச்சர்கள் பிகே சேகர்பாபு மா சுப்பிரமணியன் முன்னாள் அமைச்சர்கள் டி ஜெயக்குமார் பி தங்கமணி எஸ் பி வேலுமணி காமராஜ் பெஞ்சமின் சிவி சண்முகம் சி விஜயபாஸ்கர் எம்ஆர் விஜயபாஸ்கர் பாண்டியராஜன் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ராயபுரம் ஆர்.மனோ திருவொற்றியூர் கே.குப்பன் முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் ஓபிஎஸ் மகன் பிரதீப் மாவட்ட செயலாளர்கள் ஆர் எஸ் ராஜேஷ் நா பாலகங்கா டி ஜி வெங்கடேஷ் பாபு விருகை ரவி டி நகர் சத்யா மாதவரம் வி.மூர்த்தி வெற்றி நகர் மு. சுந்தர் லட்சுமி நாராயணன் வாலாஜாபாத் கணேசன் திமுக மாவட்ட செயலாளர் இளைய அருணா திமுக எம்எல்ஏ ஜெ.ஜெ. எபநேசர் வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக பொருளாளர் ஏ.கணேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் அவரது இறுதி சடங்கு பணிகளை வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் மற்றும் மதுசூதனன் குடும்பத்தினரும் செய்து வருகின்றனர் ஏராளமான அதிமுக தொண்டர்கள் தண்டையார்பேட்டையில் குவிந்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here