மாநில தலைவர் காயல் அப்பாஸ் தலைமையில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆலோசனை கூட்டம் !

0
365

தென்காசி மாவட்டம், விகேபுதூரில் உள்ள மண்டபத்தில் மாலை 3 மணி அளவில் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது ஆலோசனை கூட்டத்தில் போட பட்ட தீர்மானங்கள்*

1) விகே புதூர் அரசு மருத்துவ மனையை விரிவுபடுத்தி கூடுதல் மருத்துவர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

2) ஆலங்குளம் தாலுகாவை சேர்ந்த ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்டபட்ட இராமநாதபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அதன் அருகில் உள்ள கல்குவாரில் பாறையை உடைக்க வெடி வைப்பதனால் அருகில் உள்ள வீடுகள் அதிர்வுர்கள் ஏற்படுகின்றன. மற்றும் இருதய நோயாளிகள் மிகவும் சிரமத்துகுள்ளாகி வருகிறார்கள். ஆகயினால் கல்குவாரி அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தாமதிக்கும் பட்சத்தில் மக்களை ஓன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முன்னெடுக்கும்.

3) விகே புதூர் தாலுகாவை சேர்ந்த ஆனைக்குளம் கிராமத்தில் உள்ள மக்கள் அவசர மருத்துவ சிகிச்சை பெற அரசு மருத்துவமனை இல்லாதனால் மிகவும் சிரமம்பட்டு வருகிறார்கள். ஆகயினால் ஆனைகுளம் கிராமம் மக்கள் 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை பெற அரசு மருத்துவ மனை அமைத்து தரும் படி கேட்டு கொள்கிறோம்.

4) வீகே புதூர் தாலுகாவை தாலுகாவை சேர்ந்த ஆனைக்குளம் கிராமம் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். குற்றாலத்தில் இருந்து வரும் தண்ணீர் ஆனைக்குளம் வழியாக இனைப்பு செய்து கால்வாய் வசதி செய்து தரும் படி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம் என்று தீர்மானங்கள் நிறை வேற்ற பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னிலை வகித்த மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான். மாநில நிர்வாக பொருப்பாளர் அப்துல் நாசர். மாவட்ட தலைவர் தமிம் அன்சாரி. மாவட்ட செயலாளர் மீனாட்சி ஆனந்த். மாவட்ட பொருளாளர் இசாக். மாவட்ட ஓருங்கினைப்பாளர் முருகேசன்.

வரவேற்புஉரை

மாவட்ட நிர்வாக ஆலோசகர் பக்கீர் மைதீன்

நன்றிஉரை

கீழப்பாவூர் ஓன்றிய அமைப்பு செயலாளர் மாடசாமி . மற்றும் இந்த நிகழ்வில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here