மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்றும் 22-வது நாளாக தொடருகிறது. கடும் பனி, குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் தொடருகிறது,
விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு உட்பட இதுவரை 20 பேர் மரணம் அடைந்துவிட்டனர். அதாவது நாள்தோறும் ஒருவர் வீதம் உயிரை தியாகம் செய்து வருகின்றனர். இன்னமும் எத்தனை உயிர்கள்தான் உங்களுக்கு வேண்டுமோ? இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். முன்னதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களும் விவசாய சட்ட நகல்களை சட்டசபையில் கிழித்து எறிந்து எதிர்ப்பை காட்டினர்.
















