தமிழக வெற்றிக் கழகம் (TVK) பெரும்பான்மை நிரூபித்தது.

0
33

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மே 13) நடைபெற்ற பரபரப்பான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு அபார வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 22 பேர் வாக்களித்த நிலையில், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதன் மூலம் தேவையான பெரும்பான்மையை விடக் கூடுதல் பலத்துடன் விஜய் அரசு தனது பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here