சென்னை இராயபுரத்தில் கஞ்சா கடத்தி வந்து விற்பதாக பெண் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரின் சென்னை மாநாகரின் கஞ்சாவிற்பனையை தடுக்க சென்னை முழுவதும் போலிசார் மும்முரம் காட்டி வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக வடசென்னை துணை ஆணையர்”
சிவபிரசாத் அவர்களின் தலைமை மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக போலிசிருக்கு இரகசிய தகவல் வந்ததின் பேரில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்த இருவரை கண்டறிந்து விசாரணை செய்தது அதில் அவர்கள் ஆந்திரமாநிலம் நெசப்பட்டிணத்தை சேர்ந்த நெக்கா ரமனண்(33) சத்தியவதி(33) இருவர் கைது செய்யப்பட்டு விசாரித்ததில்
இருவர் சென்னையை சேர்ந் மூன்று மொத்த வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யவந்தது தெரியவந்தது
இராயபுரம் NRT மேம்பாலம் அருகே இவர்களிடம் கஞ்சாவாங்க மூன்றுபேர் வருவதாக விசாரணையில் தெரிந்த நிலையில் அங்கு சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் முவரையும் பிடித்து போலிசார் விசாரித்தனர்
விசாரணையில் அவர்கள்
மணலியை சேர்ந்த
மணிகண்டன்(30) எ ஒத்தவாடை மணி
தண்டையார்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி(41) என்பதும்
புதுவண்ணாரப்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்த சூர்யா(28) என்பதும் தெரியவந்தது
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரிடம்”இருந்து 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
இதன் மதிப்பு சுமார் 30 இலட்சம் என தெரியவருகிறது
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
















