10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் -சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

0
235
ட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி, கலைஞர் அரசு கலைக் கல்லூரி என பெயர் மாற்றப்படும். செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் பாடப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. மேலும், வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட உள்ளது” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அரசு கல்லூரிகளில் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள், பி.காம் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கை, தமிழ் வழியில் பட்டய படிப்புகள், இறுதியாண்டு மாணவர்களுக்கு அயல்நாட்டு மொழிகள் கற்பிக்க ஏற்பாடு, 5 மண்டலங்களில் செய்கலைஞர் ஆய்வுக்கூடம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளையும் அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here