வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்எண்ணை கேனுடன் பொதுமக்கள் போராட்டம்

0
281
திருப்பூர் – ரெயில்வே கேட் அருகே ஏராளமான  வீடுகள் உள்ளது.  இதில்  2 வீடுகள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வீடுகளால்  போக்கு வரத்துக்கு சிரமமாக  உள்ளதாகவும் சிலர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று காலை  புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை  இடிப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அப்போது  2 வீடுகளின் குடும்பத்தினர், நாங்கள் பட்டா நிலத்தில்  வீடுகள் கட்டியுள்ளோம். எனவே இடிக்கக்கூடாது என்றனர்.
ஆனால் அதிகாரிகள்  பட்டா இடம் போக மீதி இடத்திலும்   வீடு கட்டியுள்ளனர். அதனை இடிக்க உள்ளோம் என்றனர்.
இதனால்  அதிகாரி களுக்கும்,  2 வீடுகளை சேர்ந்தவர்களுக்கும் இடையே  வாக்குவாதம்  ஏற்பட்டது.
மேலும்  வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வீட்டை சேர்ந்தவர்களும்  மண்எண்ணை கேனுடன் தரையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுத்தால்  இங்கேயே தீக்குளித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது.  மேலும் பாதுகாப்புக்காக  போலீசார் குவிக்கப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here