தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும்,
திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.சந்திரன் அவர்களுக்கும் மாங்கனி தோட்ட உரிமையாளர் சார்பில் கோரிக்கை.
திருத்தணி தொகுதி மாங்கனி தோட்ட உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பள்ளிப்பட்டு தாலுக்காவில் ஒரு மாம்பழ ஜுஸ் மற்றும் மதிப்பு கூட்டல் தொழிற்சாலை அமைத்து தர வேண்டுகோள் வைக்கின்றனர்.கடந்த காலங்களில் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பழ தொழில்சாலைகளில் தமிழக மாம்பழங்கள் வாங்குவது இல்லை என்று தடை விதித்தனர்.அதன் பிறகு தமிழக மாங்கனி தோட்ட உரிமையாளர்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.lஅதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு பலத்த நஷ்டம் அடைந்தனர்.ஒப்பந்த அடிப்படையில் தோட்டம் எடுத்தவர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். மாம்பழங்கள் பறிக்காமல் அப்படியே தோட்டங்களில் விட்டுவிட்டுச் சென்றனர் தோட்ட உரிமையாளர்கள்.மா மரங்களை அழித்து விட்டு வேறு ஏதாவது செய்யலாமா என்ற யோசனையில் இருந்தனர்.இப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையில் மாம்பழ ஜூஸ் பேட்டரிக்கும் தோட்ட உரிமையாளருக்கும் இடையே இடைத்தரகர்கள் உருவாகினர்.அவர்கள் கொள்ளை லாபம் அடித்தனர்.இது அன்றைய காலகட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் மாம்பழத் தோட்ட உரிமையாளர்களிடம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.ஒரு பரபரப்பான செய்தியாகவே இருந்தது.அன்றும் இதே போல் செய்தி பதியப்பட்டு அது முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கோ.அரி அவர்களின் கவனத்திற்கும் அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றது.அதன் பிறகு அனைவரும் மாம்பழ ஜூஸ் ஃபேக்டரி உரிமையாளர்களுடன் சமரசம் பேசி ஒரு வழியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு பழைய நிலைக்கு திரும்பியது.ஆனாலும் தோட்ட உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது விலை குறைந்ததால்.அந்த சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் எப்பொழுது வேண்டும் என்றாலும் இதே நிலை மீண்டும் வரலாம் என்ற அச்சம் காரணமாக தோட்டங்களை சரிவர பராமரிப்பும் செய்யாமலே வைத்துள்ளனர்.ஆகவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் திருத்தணி தொகுதியின் MLA எஸ்.சந்திரன் அவர்களும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி பள்ளிப்பட்டு தாலுகா R.K.பேட்டை திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாம்பழ தோட்ட உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும்படி கேட்டுக் கொள்கிறோம்.அவர்களுக்கு ஒரு மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைத்து தர ஆவன செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.அனைத்து கட்சியினரும் இந்த பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி குரல் கொடுக்க வேண்டும்.பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இதே கருத்தை முன் வைக்கின்றனர்.நல்லது நடக்குமா,விடியல் கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர் தோட்ட உரிமையாளர்கள்.
K.S.திலீப்
மாவட்ட நிருபர் திருவள்ளூர்
















