கனவுகள் நனவாகட்டும்! ஒரு மாணவியின் நெகிழ்ச்சியான குரல்.
கல்வி ஒன்றே ஒரு குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றும் வலிமை கொண்டது. தன் தந்தையை இழந்த நிலையில், ஒற்றைத் தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஆர்.கே. நகரைச் சேர்ந்த மாணவி கல்லூரி கனவு, பொருளாதாரச் சூழலால் கேள்விக்குறியானது.
பி.எஸ்.சி தடயவியல் அறிவியல் (B.Sc Forensic Science) படிக்க ஆசைப்பட்ட அந்த மாணவிக்கு, ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் கட்டணம் என்பது எட்டாக்கனியாக இருந்தது.
படிப்பு எக்காரணம் கொண்டும் நின்றுவிடக்கூடாது என உறுதியளித்த நமது ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். மரிய வில்சன் எம் எல் ஏ, அந்த மாணவியின் முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்று, இன்று அவரது எதிர்காலத்திற்கு ஒளியேற்றியுள்ளார்.
உதவி பெற்ற அந்த மாணவி, தானும் படித்து முடித்த பிறகு இதேபோல் மற்றவர்களுக்கு உதவுவேன் என உருக்கமாகப் பேசியது நம் அனைவரின் மனதையும் நெகிழச் செய்கிறது.
மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைச் சொல்லும் இந்தச் செயல் போற்றுதலுக்குரியது!
#RKNagar #EducationFirst #HelpingHands #Humanity #StudentSuccess #DreamBig #SocialService #HumanityStillExists
















