சென்னை,புதுவண்ணாரப்பேட்டை-நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்:

0
225

சென்னை,புதுவண்ணாரப்பேட்டையில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டுவருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் காவல்துறையினர் தண்டையார்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஜோடியாக வந்தவர்கள் காவலர்களை கண்டவுடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். உடனே அவர்களை மடக்கி பிடித்த காவலர்கள், அவர்களிடம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து இருவரும் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்த தினகராஜ்(27) அவருடைய மனைவி பிரியா(26) என்பதும் இவர்கள் இருவரும் ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கிவந்து புதுவண்ணாரப்பேட்டையில் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவலர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரியாவை புழல் சிறையிலும், தினகராஜை சைதாப்பேட்டை கிளை சிறையிலும் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here