சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை ஏத்திக்கொண்டு எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இறக்கிவிட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்தது ஆம்புலன்ஸில் டிரைவர் ஐயப்பன் உதவியாளர் குமாரவேல் வயது( 26) ஆகியோர் இருந்தனர் ஆம்புலன்சை உதவியாளர் குமரவேல் ஓட்டி வந்தார் எண்ணூர் விரைவு சாலையில் திருவெற்றியூர் தாங்கள் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒருபக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி
கவிழ்ந்தது உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் வண்டியில் உள்ளே இருந்தவர்களை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் அப்போது அந்த வழியாக வந்த திருவொற்றியூர்
எம் எல் ஏ கே பி சங்கர் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து கிடப்பதைக் கண்டவுடன் காரை நிறுத்தி உடனடியாக ஆம்புலன்சை தூக்கி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யுமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனை சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..
















