வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜீவா வயது 50 அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் மரம் ஏறும் தொழில் செய்யும் இவர் இன்று காலை 5 மணி அளவில் சித்தாத்தூரிலிருந்து ஐதர்புறத்திற்கு வேலைக்காக சைக்கிளில் சென்றுள்ளார், அப்பொழுது செல்லும் வழியில் மின்சார ஒயர் அறுந்து விழுந்து இருப்பதை கவனிக்காமல் சென்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














