தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக்-கருவிழி பதிவு முறை;

0
373

தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக தற்போது கண் கருவிழி பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.தமிழக அரசின் கடைகளில் பயனாளிகள் தங்களின் கை விரல் ரேகையை பதிவு செய்து மாதந்தோறும் பொருட்களை பெற்று வருகின்றனர். இதில் வயது முதிர்ந்தவர்கள் கைரேகை பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் பயோமெட்ரிக் இயந்திரத்தில் அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதால் பொருட்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பயனாளிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கைகள் வந்ததையடுத்து தற்போது கண் கருவிழி கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதத்திற்கு தமிழகத்தில் 36,000 ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் கைரேகை சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here