தமிழக மட்டுமல்லாது  உலக  அளவில் புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்  மரணம்;

0
244

தமிழக மட்டுமல்லாது  உலக  அளவில் புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்  அக்.19  அன்று இயற்கை எய்தினார்.

இவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உடலுக்கு ஆன்மீக தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை,  டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல  தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அதிகமானோர் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here