கொரோனாவுக்கு பலியாகும் முதல் தமிழக எம்பி;

0
290

தமிழகத்தில் கொரோனாவுக்கு மரணமடைந்த 2ஆவது மக்கள் பிரதிநிதி வசந்தகுமார் ஆவார். தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவுக்கு பலியானவர் எம்எல்ஏவாக இருந்த ஜெ அன்பழகன் காலமானார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டுள்ளது. இந்த நோய்க்கு மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர் என பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக இருந்த வசந்தகுமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை இன்று கவலைக்கிடமாக இருந்தது. இதை அறிந்த அவரது அண்ணன் மகளும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் சென்னை வந்திருந்ததாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இவரது உடல்நிலை மேலும் மோசமாகி காலமாகிவிட்டார்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மரணமடைந்த 2வது மக்கள் பிரதிநிதி வசந்தகுமார். அதுபோல் கொரோனாவுக்கு இறந்த முதல் தமிழக எம்பியாவார். முன்னதாக திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 10-ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here