காசிமேடு கடற்கரையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு ;

0
314

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய நிவர் புயல் சென்னையை ஒட்டியுள்ள மாமல்லபுரம் மரக்காணம் அருகே கரையை கடந்தது அப்பொழுது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல சேதங்களை ஏற்படுத்தியது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்தினர்
இதில் ஒரு பகுதியாக காசிமேடு கடற்கரையில் புயலால் பாதிக்கப்பட்டு 40 க்கும் மேற்பட்ட படகுகள் நீரில் மூழ்கியது மேலும் கட்டுமர படகுகள் பைபர் படகுகள் என ஏராளமான படகுகள் சேதம் அடைந்தது பாதிக்கப்பட்ட படகுகள் மற்றும் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்

மத்திய அரசு உள்துறை இணைச்செயலாளர் அசு தோஷ் அக்னி கோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்
இந்த குழுவினர் இன்று மதியம் சென்னை வந்தனர். இந்த குழுவில் ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்துறையின் எண்ணை வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துறை மண்டல அதிகாரி ரணன்ஜெய்சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை இயக்குனர்களில் ஒருவரான பர்தெண்டு குமார்சிங், மத்திய மின்சார குழுமத்தின் துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தர்மவீரர் ஜா, மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ.ஹர்ஷா ஆகிய 7 பேர் கொண்ட குழு காசிமேடு பகுதியில் ஆய்வு நடத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here